14th Cross Street, NGO'A'Colony, Tirunelveli - 627007
b1
RP Narendiran
95439 33406BOOK NOW

Site Seeing

Site Seeing

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள சிவாலயங்கள்:-

பஞ்சபூத ஸ்தலங்கள்

  • சங்கரன்கோயில் - மண் தலம் (ப்ருத்திவி)
  • கரிவலம்வந்தநல்லூர் - அக்னி தலம்
  • தாருகாபுரம் - நீர் தலம்
  • தென்மலை - காற்று தலம்
  • தேவதானம் - ஆகாய தலம்

பஞ்ச லிங்க ஸ்தலங்கள்:- (ராமர் பூசித்த ஸ்தலங்கள்)

  • களக்காடு - சத்யவாகீசர்
  • பத்தை - குலசேகரநாதம்
  • பதுமனேரி - நெல்லையப்பர்
  • தேவநல்லூர் - சோமநாதம்
  • சிங்கிகுளம் - கைலாசநாதம்

இவை ஐந்தும் பஞ்சலிங்க தளங்கள், பஞ்சகிரி தளங்கள், பஞ்சயக்ஜ்ன தளங்கள் ஆகும்.

முப்பீட ஸ்தலங்கள்:-

  • அம்பாசமுத்திரம் - திருமூலநாதர் திருக்கோயில்.
  • ஊர்காடு - திருக்கோஷ்டியப்பர் திருக்கோயில்.
  • வல்லநாடு - திருமூலநாதர் திருக்கோயில்.

மேற்கண்ட மூன்று திருக்கோயில்களிலும் குவளை அணிவித்து வழிபாடுகள் நடக்கின்றன.

நவலிங்கபுரம்:-

  • வல்லநாடு - திருமூலநாதர் திருக்கோயில்
  • காந்தீஸ்வரம் - ஏகாந்தலிங்கர் திருக்கோயில்
  • புறையூர் - அயனாதீஸ்வரர் திருக்கோயில்
  • தெற்குகாரசேரி - குலசேகரமுடையார் திருக்கோயில்
  • காயல்பட்டினம் - மெய்கண்டேஸ்வரர் திருக்கோயில்
  • புதுக்குடி - வடநக்கநாயனார் திருக்கோயில்
  • வெள்ளூர் - நடுநக்கநாயனார் திருக்கோயில்
  • மனவளராய்குறிச்சி - தென்நக்கநாயனார் திருக்கோயில்

நவ சமுத்திர ஸ்தலங்கள்:-

  • அம்பாசமுத்திரம்,
  • ரவணசமுத்திரம்,
  • வீராசமுத்திரம்,
  • அரங்கசமுத்திரம்,
  • தளபதிசமுத்திரம்,
  • வாலசமுத்திரம்,
  • கோபாலசமுத்திரம்,
  • வடமலைசமுத்திரம் (பத்மனேரி),
  • ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்).

பஞ்ச ஆசன ஸ்தலங்கள்:-

  • ஏர்வாடி - திருவழுந்தீசர் திருக்கோயில்
  • களக்காடு - சத்யவாகீசர் திருக்கோயில்
  • நான்குநேரி - திருநாகேஷ்வரர் திருக்கோயில்
  • விஜயநாராயணம் - மனோன்மணீசர் திருக்கோயில்
  • செண்பகராமநல்லூர் - இராமலிங்கர் திருக்கோயில்

பஞ்ச குரோச ஸ்தலங்கள் (காசிக்கு சமமான):-

  • சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில்
  • ஆழ்வார்குறிச்சி - வன்னீஸ்வரர் திருக்கோயில்
  • கடையம் - வில்வவனநாதர் திருக்கோயில்
  • திருப்புடைமருதூர் - நாறும்பூநாதர் திருக்கோயில்
  • பாபநாசம் - பாபநாசர் திருக்கோயில்

பஞ்ச பீட ஸ்தலங்கள்:-

  • கூர்ம பீடம் - பிரம்மதேசம்
  • சக்ர பீடம் - குற்றாலம்
  • பத்ம பீடம் - தென்காசி
  • காந்தி பீடம் - திருநெல்வேலி
  • குமரி பீடம் - கன்னியாகுமரி

பஞ்ச படிம ஸ்தலங்கள்:-

  • கட்டாரிமங்கலம், 
  • கருவேலன்குளம்,
  • கரிசூழ்ந்தமங்கலம்,
  • செப்பறை,
  • தருவை

ஆதி கைலாய ஸ்தலங்கள்:-

  • பிரம்மதேசம் கைலாசநாதர் திருக்கோயில்
  • அரியநாயகிபுரம் கைலாசநாதர் திருக்கோயில்
  • திருநெல்வேலி தென்கைலாசநாதர் (நெல்லையப்பர்) திருக்கோயில்
  • கீழநத்தம் (மேலூர்) - கைலாசநாதர் திருக்கோயில்
  • முறப்பநாடு - கைலாசநாதர் திருக்கோயில்
  • ஸ்ரீவைகுண்டம் - கைலாசநாதர் திருக்கோயில்
  • தென்திருப்பேரை - கைலாசநாதர் திருக்கோயில்
  • சேர்ந்தபூமங்கலம் - கைலாசநாதர் திருக்கோயில்
  • கங்கைகொண்டான் - கைலாசநாதர் திருக்கோயில்.

தேர், தெப்பம், கொடிமரம், பலி பீடம், பரிவார தெய்வங்கள், தேவர்கள், அப்சரஸ்கன்னிகள், நடராஜரின் திருநடனம், மூர்த்தி, தலம், தீர்த்தம், இவைகள் அனைத்தும் பூர்ணமாக இடம் பெற்றிருக்கும். சிவமே தானாகி ஞானோதயம் அளித்த தலங்கள் இவை.

தச வீரட்டன ஸ்தலங்கள்:-

  • சிவசைலம் -
    சிவசைலப்பர் திருக்கோயில் - பக்த தளம்
  • வழுதூர் - 
    அக்னீஸ்வரர் திருக்கோயில் - மகேச தலம்
  • கோடகநல்லூர் -
    அவிமுக்தீஸ்வரர் திருக்கோயில்- பிராண லிங்கத் தலம்
  • சிங்கிகுளம் - 
    கைலாசநாதர் திருக்கோயில் - ஞானலிங்கத்தலம்
  • மேலநத்தம் -
    அக்னீஸ்வரர் திருக்கோயில் - சரண தலம்
  • ராஜவல்லிபுரம் -
    அக்னீஸ்வரர் திருக்கோயில் - சகாய தலம்
  • தென்மலை - 
    திருப்பாத்தீஸ்வரமுடையார் - பிரசாதி தலம்
  • அங்கமங்கலம் -
    நரசிங்கஈஸ்வரமுடையார் - கிரியாலிங்க தலம்
  • காயல்பட்டினம்-
    மெய்கண்டேஸ்வரர் திருக்கோயில்-சம்பத் தலம்
  • திற்பரப்பு -
    மகாதேவர் திருக்கோயில் - பஞ்சாக்ரதலம்

இரு சபை:-

  • சித்ரசபை - திருக்குற்றாலம்
  • தாமிர சபை - திருநெல்வேலி

வாலி பூசித்த ஸ்தலங்கள்:-

  • திருவாலீச்வரம் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
  • கீழப்பாவூர் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
  • தென்காசி வாலியன்பத்தை - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
  • ஓம் சிவாய நம
temples in and around tirunelveli temples in and around tirunelveli

PLEASANT STAY AT TIRUNELVELI

SCHEDULE VISIT
Whatsapp
Contact Us